ஜனநாயகன் பாடலுக்கு Hanumankind குரல்!

இயக்குநர் H. வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் 'ஜனநாயகன்' திரைப்படம், மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் இந்தப் படத்துக்குப் பிறகு சினிமாவை விட்டு முழுநேர அரசியலுக்கு செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருப்பதால், இந்த படம் ரசிகர்களிடையே சிறப்பான எதிரொலியை உருவாக்கியுள்ளது.

படத்தில் பூஜா ஹெக்டே, மமீதா பைஜூ, பிரியாமணி, பாபி தியோல் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளராக அனிருத் பணியாற்றி வருகிறார்.

இந்தப் படத்திற்காக அனிருத் மற்றும் மலையாள ரேப் பாடகர் Hanumankind இணைந்து பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளனர். இவர் ஏற்கனவே கடந்த ஆண்டு பகத் பாசில் நடித்த 'ஆவேஷம்' படத்தில் பாடியிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது 'ஜனநாயகன்' படத்தில் அவர் பாடும் பாடல், ரசிகர்களிடையே கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments