2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று (26.04.2025) வெளியானன. இதில் வவுனியா தெற்கு கல்வி வலயத்தைச் சேர்ந்த நெளுக்குளம் கலைமகள் வித்தியாலய மாணவி பிதுர்சா சற்குணம் வர்த்தகப் பிரிவில் சிறப்பான முன்னேற்றத்தை பெற்றுள்ளார்.
அவர் 3ஏ சித்திகளை பெற்று,
* மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.
* தேசிய ரீதியில் 357 ஆவது இடத்தை பிடித்து பெருமை சேர்த்துள்ளார்.
பிதுர்சாவின் இந்த சிறப்பான சாதனை அவரது கடுமையான உழைப்பிற்கும், கல்வியை நேசிக்கும் மனப்பான்மைக்கும் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
வவுனியா வலயத்திற்கும், நெளுக்குளம் கலைமகள் வித்தியாலயத்திற்கும் பெருமை சேர்த்த பிதுர்சா சற்குணத்திற்கு, எங்கள் வவுனியா வெப் குழுமத்தின் வாழ்த்துகள்!
0 Comments