முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) கடந்த நாள் மட்டக்களப்பில் அவரது அலுவலகத்தில் வைத்து குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக, 2006ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் திகதி, கொழும்பு 7இல் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்றபோது காணாமல்போன கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சிவசுப்ரமணியம் ரவீந்திரநாதன் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே இக்கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
18 ஆண்டுகளுக்குப் பிறகு இச்சம்பவத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், பிள்ளையான் கைது செய்ததையடுத்து மட்டக்களப்பில் சில இடங்களில் மக்கள் பட்டாசுகள் கொளுத்தி கொண்டாடியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
0 Comments