அண்ணாவின் தியாகம் என் சாதனை – மாணவி ருக்சிகாவின் உணர்ச்சி வெளிப்பாடு

2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் உயிர்முறைமை தொழில்நுட்பப் பிரிவில் வவுனியாவின் சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மாணவி சந்திரசேகரன் ருக்சிகா மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். அவர் 2ஏ மற்றும் பி சித்திகளைப் பெற்று தேசிய ரீதியில் 134ஆவது இடத்தையும் பெற்றுள்ளார்.

தனது வெற்றிக்கு காரணமாக, பாடசாலை ஆசிரியர்களின் முழுமையான வழிகாட்டலையும் பெற்றோரின் உறுதியான ஆதரவையும் குறிப்பிட்டுள்ள ருக்சிகா, மிக முக்கியமாக தனது அண்ணாவின் தியாகத்தை பெருமையாகக் கூறினார். “சாதாரண தரம் முடித்த பிறகு என் அண்ணா தான் வேலைக்குப் போய் என்னை படிக்க வைத்தார். அவர் இல்லையெனில் இன்று இந்த இடத்தில் நானிருக்க மாட்டேன்” என உணர்ச்சிகரமாக தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments