இலங்கையின் பிரபலமான மலைநகரமாகிய நுவரெலியா, அதன் குளிர்ந்த மற்றும் இதமான காலநிலை, பசுமை நிரம்பிய இயற்கை வளம், பூங்காக்கள், தேயிலை தோட்டங்கள் மற்றும் ஏரிகளால் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் இடமாக மாறியுள்ளது.
இந்த இடங்களில் மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுவது கிரகரி வாவி (Gregory Lake) ஆகும். இவ்வாவி நுவரெலியாவின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. தினசரி ஆயிரக்கணக்கான உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இங்கு வந்து தமது நேரத்தை அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் கழிக்கின்றனர்.
சுற்றுலா அம்சங்கள்:
கிரகரி வாவி அருகே நடைபாதைகள், சைக்கிள் பாதைகள், குழந்தைகளுக்கான விளையாட்டு பூங்காக்கள், படகு சவாரி, ஜெட் ஸ்கீ போன்ற அம்சங்கள் பயணிகளை கவர்கின்றன.
வாவிக்கரையில் அமைக்கப்பட்ட உணவகங்கள், கடைகள் மற்றும் சிறிய சந்தைகள் சுற்றுலா அனுபவத்தை மேலும் சிறப்பாக்குகின்றன.
ஒவ்வொரு வார இறுதியும் மற்றும் விடுமுறை நாட்களிலும் நுவரெலியா மாநகர சபை பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், உணவுப் பரிசுகளும் ஏற்பாடு செய்கின்றது.
தங்குமிடம் மற்றும் வசதிகள்:
சுற்றுலா பயணிகள் ஓய்வு எடுப்பதற்காக அனைத்து வசதிகளுடன் கூடிய ஹோட்டல்கள், விடுதி வீட்டுகள், விடுதி அபார்ட்மெண்ட்கள் என்பன வாவிக்கு அருகிலேயே நிரம்பியுள்ளது.
குடும்பத்தோடு பயணம் செய்யும் பயணிகளுக்காக பாதுகாப்பான சூழ்நிலையும் அமைதியான அனுபவமும் இங்கு உறுதியாக கிடைக்கின்றன.
சுற்றுவட்டாரத்தில் காணக்கூடிய இடங்கள்:
ஹக்லா பூங்கா
வெக்டோரியா பூங்கா
நுவரெலியா ரேஸ் கோர்ஸ்
ராமாயண கதைகளுடன் தொடர்புடைய அஷோக் வனம்
இந்த இடம் இயற்கையை ரசிக்க, பொழுதை மகிழ்ச்சியாக செலவிட, குடும்பத்தோடு இனிய நினைவுகளை உருவாக்க மிகவும் ஏற்றதாகும். கிரகரி வாவி, நுவரெலியாவின் சொந்தக்குழந்தை எனச் சொல்வது மிகையாகாது.
0 Comments