முல்லைத்தீவில் திடீர் சுகாதார பரிசோதனை: நுகர்விற்கு ஒவ்வாத உணவுப்பொருட்கள் அழிப்பு

இன்று (17.04.2025) முல்லைத்தீவு மாவட்டத்தின் முத்தையன்கட்டு பகுதியில் உள்ள வெதுப்பகமொன்றில் நடைபெற்ற திடீர் சுகாதார பரிசோதனையின் போது, மனித நுகர்விற்கு உரியதல்லாத 25 கிலோகிராம் க்கும் அதிகமான உற்பத்திப் பொருட்கள் கைப்பற்றி அழிக்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இயங்கி வரும் இந்த வெதுப்பகத்திற்கு, ஒட்டுசுட்டான் வைத்திய அதிகாரியின் தலைமையில் பொதுசுகாதார பரிசோதகர்கள் இன்று திடீர் பார்வையிட்டனர்.

சுகாதாரத் தரங்கள் பின்பற்றப்படாத நிலையில் காணப்பட்ட இந்த வெதுப்பகத்தில், நுகர்விற்கு பொருத்தமற்ற உணவுப் பொருட்கள் பரிசோதனையில் வெளியானதால், அவை உடனடியாக அழிக்கப்பட்டன. மேலும், குறித்த வெதுப்பகம் தற்காலிகமாக மூடப்பட்டதுடன், 10 நாட்களில் சுகாதார குறைபாடுகளை சரிசெய்யவேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

குறைகள் சரிசெய்யப்படவில்லை என்றால், உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொதுசுகாதார பரிசோதகர் வெதுப்பக உரிமையாளருக்கு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments