காசா... உலகம் பாராமலும் பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு பசிக்கொல்லையின் வேதனையை ஒவ்வொரு நாளும் அனுபவிக்கும் நிலை. கடந்த எட்டு வாரங்களாக அங்கு உணவு, மருந்து, எரிபொருள் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் அனைத்தும் தடைசெய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது “கடைசி உணவுத் தொகையும் வழங்கப்பட்டது” என ஐ.நா.வின் உலக உணவுத் திட்ட அமைப்பு (WFP) ஒரு கண்கலங்க வைக்கும் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையின் வரிகள், நம் மனதைக் கிழிக்கும் வகையில் கூறுகின்றன:
“நாங்கள் கொடுத்த கடைசி உணவுப் பொதியும் காசா மக்களிடம் இன்று சென்றடைந்தது. இது வெறும் அறிவிப்பு அல்ல – இது ஒரு சமூகத்தின் அழிவுக்கான முன்னோட்டம்.”
சுமார் நான்கு இலட்சத்திற்கும் மேற்பட்டோர், தினமும் ஒரே ஒரு உணவுக்கான நம்பிக்கையை WFP அமைப்பிலேயே வைத்திருந்தனர். இப்போது, அவர்களுக்கு உணவுக்கான மாற்று வழி எதுவும் இல்லை என அந்த அமைப்பின் பஸ்தீன பிரதிநிதி அன்டொய்ன் ரெனார்ட் அங்கீகரிக்கிறார்.
உலக நீதிமன்ற உத்தரவை மீறிய இஸ்ரேல் நடவடிக்கை
மார்ச் 2ஆம் தேதியில் இருந்து இஸ்ரேல் அரசாங்கம், உணவு, மருந்து, எரிபொருள் என எந்தவிதமான மனிதாபிமான உதவியும் காசாவுக்குள் அனுமதிக்க மறுத்துவிட்டது. இது சர்வதேச நீதிமன்றம் வழங்கிய, “உதவிகளை அனுமதிக்க வேண்டும்” என்ற உத்தரவை வெளிப்படையாக மீறுவது என உலக உணவுத் திட்டம் வலியுறுத்துகிறது.
விலை வீழ்ச்சியில் மக்கள் உயிர் ஆவியாகின்றனர்
போர் நிறுத்தத்தின் போது சேமித்திருந்த உணவுகள் இன்று நிறைவடைந்துள்ளன. இருப்பினும், சந்தைகளில் மிக குறைவாக கிடைக்கும் உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலை 1,400% வரை உயர்ந்துள்ளதாகவும் WFP தகவலளிக்கிறது. இது குறைந்த வருமானத்தில் வாழும் மக்களை, உயிர்வாழ முடியாத அளவுக்கு தள்ளிவைக்கின்றது.
"இந்த மௌனம் எப்போது முறியடையும்?"
உலகம் காணாத ஒரு சுமை, காசா மக்களின் தோள்களில் சுமத்தப்பட்டுள்ளது. குழந்தைகள் பசியால் அழுகின்றனர். நோயாளிகள் மருந்தினின்றி தவிக்கின்றனர். பெண்கள், முதியோர், தொழிலாளர்கள் – அனைவரும் வாழ்வுக்கான அடிப்படை உரிமையை இழந்து விட்டனர்.
இந்தப் பேராபத்துக்கு உலக நாடுகள் எப்போது விழித்தெழுந்து பேசப்போகின்றன? மனிதாபிமானம் என்றால் அது எல்லை கடந்தாலும் செயல்பட வேண்டிய ஒன்றே அல்லவா?
0 Comments