முதல் இரு இடங்களை கைப்பற்றிய யாழ் இரட்டையர்கள்

2024 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில், யாழ். இந்துக் கல்லூரியை சேர்ந்த இரட்டையர் மாணவர்கள் உயிரியல் விஞ்ஞான பிரிவில் பெரும் சாதனைப் பெற்றுள்ளனர்.

சி. ஜமுனானந்தா பிரணவன் மற்றும் சி. ஜமுனானந்தா சரவணன் ஆகிய இருவரும், மாவட்ட மட்டத்தில் முறையே முதல் மற்றும் இரண்டாம் இடங்களை பிடித்துள்ளதோடு, தேசிய மட்டத்தில் மூன்றாம் மற்றும் ஐந்தாம் இடங்களைப் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், இவ்விரட்டையர்களின் தந்தை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக பணியாற்றி வருவதும் குறிப்பிடவேற்கிறது. இச்சாதனை, அவர்கள் குடும்பத்திற்கும், கல்வி நிறுவனத்திற்கும் பெரும் பெருமை சேர்த்துள்ளது.

"பெருமைமிகும் இந்த சாதனைக்காக, எங்கள் வவுனியா வெப் குழுமம் முழு மனதுடன் வாழ்த்துகிறது!"

Post a Comment

0 Comments