யாழ்ப்பாணம்:
வெளிநாட்டு வேலை மற்றும் சுற்றுலா விசாக்கள் பெற்றுத் தருவதாகக் கூறி கோடிக்கணக்கில் பணம் வசூலித்து பலரையே ஏமாற்றிய கிருஷ்ணராதா என அழைக்கப்படும் பெண், தற்போது யாழ்ப்பாணச் சிறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
'ஆகிசா' என்ற பெயரிலும் அறியப்படும் இவள், யாழ் நாவலர் வீதியில் அலுவலகம் ஒன்று நடத்தி, கனடா விசா என்ற பெயரில் ஒவ்வொருவரிடமும் 50 லட்சம் ரூபாயை வாங்கியதாக கூறப்படுகிறது. வசதியான கார், சாரதி, மற்றும் பணக்கார தோற்றம் மூலம் மக்களை மோசடி செய்துள்ளார்.
இவளுக்கு எதிராக BR/01/PC/2024, BR/1654/PC/2024, BR/1999/PC/2024, BR/2001/PC/2024 என பல வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. அதேசமயம், அழகுக்கலை நிலையம் என்ற பெயரில் மேலும் பலரிடமும் பண மோசடி செய்துள்ளதும் தெரியவந்துள்ளது.
மீண்டும் கைது செய்யப்பட்ட இவள், தற்போது குடியகழ்வு மற்றும் குடியல்வு சட்டத்தின் 45C பிரிவின் கீழ் பிணை பெற முடியாதவாறு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனால் கடும் கோபமடைந்த கிருஷ்ணராதா, தன்னை கைது செய்த நேர்மையான பொலிஸ் அதிகாரியின் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
போலீசார் தெரிவித்ததாவது, கிருஷ்ணராதா போன்ற மோசடிக்காரர்கள் எதிர்காலத்தில் தொடர்ச்சியாக கைது செய்யப்படவுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments