உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியில் வசித்த 28 வயதான ராஜ் ஆர்யா, மனைவி சிம்ரனுடன் ஏற்பட்ட மோதலின் காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலைக்கு முன் தாயிடம், “நான் நிரந்தரமாக தூங்கப் போறேன்” என கூறியதும், அவர் எடுத்த கடும் முடிவு குடும்பத்தினரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
ராஜ்–சிம்ரன் தம்பதியர் இடையே நீண்ட நாட்களாக சண்டை சச்சரவுகள் நிலவியதாக கூறப்படுகிறது. சிம்ரனின் சகோதரர் ஒரு போலீசாக இருப்பதால், காவல் நிலையத்தில் ராஜ் மீது துன்புறுத்தல் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. திருமண நிகழ்வொன்றில் பங்கேற்க சிம்ரனை அழைத்துச் செல்ல முயன்ற போது ஏற்பட்ட மோதலில், ராஜ் மற்றும் அவரது தந்தை தாக்கப்பட்டதாக அவரது சகோதரி புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து, காவல் நிலையத்தில் விசாரணைக்குப் பிறகு வீட்டுக்கு திரும்பிய ராஜ், மன உளைச்சலில் இருந்து வந்தார். பின்னர் தாயிடம் “நான் தூங்கப்போகிறேன், என்னை தொந்தரவு செய்யாதீர்கள்” எனச் சொல்லி, தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.
இந்த தற்கொலை, திட்டமிட்ட துன்புறுத்தலின் விளைவே எனக் கூறும் ராஜின் குடும்பத்தினர், மனைவி சிம்ரன் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காவல்துறையில் புகார் செய்துள்ளனர்.
0 Comments