யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் - அமைச்சர் நேரில் ஆய்வு

யாழ்ப்பாண மாவட்டத்துக்கு வருகைதந்த இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, யாழ்ப்பாணத்தில் சர்வதேச தரம் வாய்ந்த கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கான திட்டங்களைப் பற்றி முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

மண்டைத்தீவு பகுதியில் மைதானம் அமைப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள காணியின் தற்போதைய நிலைமையை அமைச்சர் நேரில் பார்வையிட்டதோடு, எதிர்கால கட்டுமான பணிகளுக்கான திட்ட முன்மொழிவுகள் மற்றும் பொறிமுறை அமைப்புகளை உருவாக்குவது குறித்து உரையாடப்பட்டது.

இதன் மூலம் வடக்கு மாகாணத்திலுள்ள இளைஞர் விளையாட்டு வீரர்களுக்கு மேலும் வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிரிக்கெட் உட்கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கிலும் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

அதிதியாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மற்றும் தற்போதைய தலைமை பயிற்றுவிப்பாளராக உள்ள சனத் ஜயசூரியவும் கலந்துகொண்டார். மைதான கட்டுமானத்திற்கான நிதி உதவியை இந்திய பிரதமரிடம் கோரியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்த விஜயத்தில் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கருணாநாதன் இளங்குமரன், யாழ்ப்பாண பாதுகாப்புப் படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் மனாடா யஹம்பத் மற்றும் பல அரச அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments