தோனி மீண்டும் சென்னை அணியின் தலைவராக நியமனம்!

நடப்பு ஐபிஎல் (IPL) தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் தலைவராக செயற்பட்ட ருத்ராஜ் கெய்க்வாட், காயம் காரணமாக தலைமைப் பொறுப்பில் இருந்து விலகியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அணியின் முன்னாள் தலைவரும், ஐபிஎல் வரலாற்றின் மிகச்சிறந்த கேப்டன்களிலும் ஒருவருமான மகேந்திரசிங் தோனி மீண்டும் தலைவராக நியமிக்கபட்டுள்ளார்.

அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

தோனி மீண்டும் கேப்டனாகும் தகவல், ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments