உடையார்கட்டு சந்தையில் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட 36kg மாட்டிறைச்சி

உடையார்கட்டு – உடையார்கட்டு சந்தை பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட பொது சுகாதார பரிசோதகர் றோய்ஸ்ரன் றோய் தலைமையிலான குழு, சட்டவிரோதமாக வெட்டப்பட்ட மாட்டிறைச்சி கண்டுபிடித்து, அதனை கைப்பற்றி அழித்தது.

பொது சுகாதார பரிசோதகர்கள் சந்தை பகுதியில் உள்ள ஒரு மாட்டிறைச்சி கடையை ஆய்வு செய்யத் திடீரென சென்ற போது, அங்கு விற்பனைக்கு தயாராக வைக்கப்பட்ட மாட்டிறைச்சி தொடர்பில் சந்தேகம் எழுந்து, பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின் போது, மாட்டிறைச்சி வெட்டிய கொல்களத்தில் பற்றுச்சீட்டு இல்லாமையை கண்டறிந்தனர்.

இதைத் தொடர்ந்து, கடையின் உரிமையாளரிடம் விசாரணை நடத்தின்போது, மாட்டிறைச்சி சட்டவிரோதமாக வெட்டப்பட்டு விற்பனைக்கு இடுக்கப்பட்டதை உறுதிசெய்யப்பட்டது. இதன் பின், 36kg மாட்டிறைச்சி கைப்பற்றப்பட்டு, அதை பொது சுகாதார பரிசோதகர் றோய்ஸ்ரன் றோய் மற்றும் குழுவினரால் அழிக்கப்பட்டது.

இந்த செயல்பாடுகள் உணவு பாதுகாப்பு சட்டங்களை கட்டுப்படுத்துவதற்கும், பொதுமக்களின் சுகாதாரத்தை பாதுகாப்பதற்கும் மிக முக்கியமானவை. இது போன்ற நடவடிக்கைகள் அத்தகைய சட்டவிரோத விற்பனை மற்றும் உணவு பாதுகாப்பு குறைகளை தடுக்கும் செயலாகும்.

Post a Comment

0 Comments