காலி, யக்கலமுல்ல – கராகொட பகுதியில் கடந்த புதன்கிழமை (16) இரவு இடம்பெற்ற கார் விபத்தில் 28 வயதுடைய ஒரு பெண் உயிரிழந்துள்ளார். அவர் ஒரு குழந்தையின் தாயாவார்.
சம்பவம் தொடர்பாக பொலிஸார் தெரிவித்ததாவது, ஒரு அங்கவீனமான சிப்பாய் ஓட்டிச் சென்ற வாகனம், சுமார் 100 மீட்டர் (அடி 100) உயரமுள்ள பாறையிலிருந்து பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதாகும்.
இந்த விபத்தில் காயமடைந்த மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் ஓட்டுநர், உயிரிழந்த பெண்ணின் தாயும், பாலர் பாடசாலைக்குச் செல்லும் குழந்தையும் அடங்குகின்றனர்.
சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை யக்கலமுல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments