1912 டைட்டானிக் கடிதம் 5 மடங்கு அதிக விலைக்கு ஏலத்தில்!

வரலாற்றில் இடம் பெற்ற டைட்டானிக் கப்பல் மூழ்குவதற்கு சில தினங்களுக்கு முன்னர் எழுதப்பட்ட ஒரு கடிதம், இங்கிலாந்தில் நடைபெற்ற ஏலத்தில் 400,000 அமெரிக்க டொலருக்கு விற்பனையானது.

இந்த கடிதம், டைட்டானிக்கில் பயணித்த கர்னல் ஆர்ச்சிபால்ட் கிரேசி என்பவரால் எழுதப்பட்டது.

1912 ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் திகதி, சவுத்தாம்ப்டனில் இருந்து டைட்டானிக் கப்பலில் ஏறிய அன்று, அவர் இந்த கடிதத்தை எழுதியிருந்தார்.

குறித்த கடிதம், எதிர்பார்த்ததைவிட 5 மடங்கு அதிக விலைக்கு விற்பனையாகி வரலாற்றில் தனி தடம் பதித்துள்ளது.

கர்னல் கிரேசி, டைட்டானிக் பேராபத்தில் உயிர்தப்பிய பின்னர், தன் அனுபவங்களைப் பல இடங்களில் பதிவு செய்தவராகவும், கடைசியில் அந்த அதிர்ச்சி காரணமாகவே காலமானவராகவும் குறிப்பிடப்படுகிறார்.

வரலாற்றின் ஒவ்வொரு துணுக்கும், இன்று உலகத்தை வியக்க வைக்கிறது!

Post a Comment

0 Comments