வவுனியாவில் நடைபெற்ற மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியில், தனி காட்டாஸ் மற்றும் குமுத்தே ஆகிய இரண்டு பிரிவுகளிலும் முதலிடத்தைப் பிடித்து தங்கப் பதக்கத்தையும், குழு காட்டா பிரிவில் இரண்டாம் இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கத்தையும் பெற்று ரெஜிஸ்ரிகா குட்டி சாதனை படைத்துள்ளார்.
ரெஜிஸ்ரிகாவின் வயது, அவர் வளர்ந்து வரும் சூழல் மற்றும் புறசூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டால், இது ஒரு மிகப்பெரிய சாதனை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவரது திறமை, ஒழுக்கம் மற்றும் அர்ப்பணிப்பு உண்மையில் பாராட்டத்தக்கவை. அவரைப் போன்ற இளைஞர்கள் தங்கள் திறமைகளை முழுமையாக வெளிப்படுத்துவதற்கு தேவையான ஆதரவைப் பெறுவது மிகவும் முக்கியம்.
ரெஜிஸ்ரிகாவின் தாய் தந்தையர்களுக்கு மிக்க நன்றி, அவரது திறமைகளைக் கண்டறிந்து, அவரை ஒரு சாதனை மகளாக உருவாக்கியதற்காக. அவரது வெற்றியில் அவர்களின் பங்களிப்பு மிகப்பெரியது.
ரெஜிஸ்ரிகாவின் வெற்றி மட்டுமல்லாமல், அவரது ஒழுக்கமும் அர்ப்பணிப்பும் பலருக்கு ஊக்கமளிக்கும். ஒரு இலக்கை நோக்கி பயணிக்கும் போது, தன்னைக் கட்டுப்படுத்தி, உடலை வருத்தி உழைப்பது போன்ற குணங்கள் அவரை மேலும் உயரத்திற்கு கொண்டு செல்லும்.
0 Comments