இன்று பிரச்சனை இல்லாத குடும்பம் என்று எதுவுமே இருக்காது. ஆனால் அந்தப் பிரச்சினைகளுக்கும் ஒரு அளவு உண்டு. எப்பொழுதுமே பிரச்சனையாக இருக்கும் குடும்பத்தில் நிம்மதியும் இருக்காது, சந்தோஷமும் இருக்காது.
பெரும்பாலும் எப்பொழுதும் பிரச்சனையாக இருக்கும் குடும்பத்தில் பெரிய பிரச்சனையாக இருப்பது இந்த கடன் தான். கடன் ஒரு மனிதனின் நிம்மதி சந்தோஷம் ஆரோக்கியம் என அனைத்தையும் சீர்குலைத்து விடும்.
அப்படியானால் அந்த கடன் அடைய நம் செல்வ வளம் பெருக வேண்டும் இந்த இரண்டையும் ஒரு சேர நமக்கு அருளக் கூடிய தெய்வம் விநாயகப் பெருமான். இந்த விநாயகரை எளிமையான முறையில் வழிபடுவதன் மூலம் நம்முடைய கடன் தொல்லைகளை தீர்த்துக் கொள்ள முடியும் அது எப்படி என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.
கடன் தீர விநாயகர் வழிபாடு
இந்த வழிபாடு நாம் செவ்வாய்க்கிழமையில் செய்ய வேண்டும் செவ்வாய்க்கிழமையில் முருகருக்கு தானே விசேஷம் விநாயகருக்கு என்று கேட்கலாம். கடன் அடையவும் கடன் பிரச்சனை தீரவும் செவ்வாய்க்கிழமை உகந்த நாள்.
முழுமுதற் கடவுளான விநாயகரை எந்த நாளில் வேண்டுமானாலும் வணங்கலாம். நாம் எப்படி வணங்கினாலும் நமக்கு அருள் புரிவார்.
அப்படியான முழு முதல் கடவுளை செவ்வாய்க்கிழமையில் இந்த முறையில் வணங்கினால் கடன் அடைவதோடு செல்வ வளமும் பெருகும்.
செவ்வாய்க்கிழமை அன்று காலை வேலையில் உங்கள் வீட்டில் இருக்கும் விநாயகர் படத்திற்கு அருகம்புல் வைத்து ஒரு தீபம் ஏற்றி விடுங்கள். ஒரு சிறிய தட்டில் ஒரு கைப்பிடி பச்சை அரிசி, சிறிதளவு நாட்டுச்சர்க்கரை அதில் 2 ஏலக்காய் வைத்து விநாயகருக்கு நெய்வேதியமாக வைக்க வேண்டும்.
இந்த வழிபாடு செய்யும் பொழுது உங்களுடைய கடன் முழுவதுமாக அடைந்து செல்வ வளம் பெருக வேண்டும் என்று விநாயகரை மனதார வேண்டிக் கொள்ளுங்கள். இது போல 16 செவ்வாய்க்கிழமைகள் விநாயகர் பெருமானை தொடர்ந்து வழிபட்டு வரும் போது உங்களுடைய கடன் முற்றிலுமாக தீர்வதற்கு வழி கிடைப்பதுடன் செல்வ வளம் பெருகும்.
விநாயகருக்கு வைத்து வழிபட்ட இந்த பச்சரிசி ஏலக்காய் நாட்டு சர்க்கரை போன்றவற்றை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். அன்றைய தினம் வழிபாடு முடிந்த பிறகு மாலை வேளையில் விநாயகர் ஆலயத்திற்கு சென்று வழிபடுவது மேலும் நல்ல பலனை தருவதாக அமையும்.
எளிமையான முறையில் இந்த வழிபாட்டை செய்து நம்முடைய தீராத கடன் தொல்லையிலிருந்து எளிதாக வெளிவர வழி தேடி கொள்ளலாம் நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை செய்து பலன் கொள்ளலாம்.
0 Comments