அகரம் அறக்கட்டளையின் புதிய அலுவலகம்: கல்விக்காக மேலும் ஒரு படி முன்னேற்றி நிறுவல்!

நடிகர் சூர்யா நிறுவிய 'அகரம் அறக்கட்டளை' (Agaram Foundation) சென்னை தியாகராய நகரில் (தி.நகர்) புதிய அலுவலகத்தை திறந்து வைத்துள்ளது.

இந்நிகழ்வில், 'ஜெய் பீம்' படத்தின் இயக்குநர் த.செ.ஞானவேல் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். சூர்யா, 2006 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த அறக்கட்டளை, அரசு பள்ளிகளில் பயிலும் முதல் தலைமுறை மாணவர்களுக்கு உயர்கல்வி உதவிகளை வழங்கி வருகிறது. 

'விதை' திட்டத்தின் மூலம், இதுவரை 5,813 மாணவர்கள் கல்வி பயின்று முடித்துள்ளனர்; தற்போது 2,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலும் நிலையில் உள்ளனர், இதில் 70% மாணவியர்கள் ஆவர். 

சூர்யா, இந்த புதிய அலுவலகம் நன்கொடையாக வந்த பணத்தில் அல்லாது, தனது வருமானத்தில் இருந்து கட்டப்பட்டதாகவும், நன்கொடைகள் மாணவர்களின் கல்விக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன என்றும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments