மின்சார விநியோகத்தை முழுமையாக மீளமைக்க சில மணித்தியாலங்கள் எடுக்கும் – பொறுமையாக இருக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது மின்சார சபை.
நாடளாவிய ரீதியில் திடீர் மின்தடை ஏற்பட்டுள்ளதால் மக்கள் பெரும் அசௌகரியத்திற்கு முகம் கொடுத்துள்ளனர்.
இந்த இடையூறுக்கான காரணம் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை எனினும் வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி குரங்கு ஒன்றின் செயலினால் பாணதுறை பகுதியில் உள்ள மின்சார நிலையத்தில் இத்தடை ஏற்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதை உறுதிப்படுத்தாத மின்சார சபை அதிகாரிகள் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால், பொதுமக்கள் பொறுமையாக இருக்குமாறும், மின்சார விநியோகம் சீராகும்வரை நீரையும் அளவோடு பயன்படுத்துமாறு கோரியுள்ளனர்.
0 Comments