பிரபல இந்தி நடிகர் நீல் நிதின் முகேஷ், அமெரிக்க விமான நிலையத்தில் அதிகாரிகளால் விசாரணைக்கு ஆளாகி பின்னர் விடுவிக்கப்பட்டார்.
நீல் நிதின் முகேஷ்
தமிழில் விஜய் நடிப்பில் வெளியான "கத்தி" திரைப்படத்தில் வில்லன் வேடத்தில் நடித்தவர் நீல் நிதின் முகேஷ்.
இந்தியில் பிரபல நடிகரான இவர் படப்பிடிப்பிற்காக அமெரிக்கா சென்றுள்ளார். அவர் நியூயார்க் நகர விமான நிலையத்தில் அதிகாரிகளால் பிடித்து வைக்கப்பட்டார்.
நீலின் பாஸ்போர்ட்டை பார்த்த அதிகாரிகள், 'நீங்கள் பார்ப்பதற்கு இந்தியர் போல இல்லை' என கூறியுள்ளனர். பின்னர் அவரிடம் சிலமணி நேரங்கள் விசாரணை நடத்தியுள்ளனர்.
பின்னணி பாடகர்கள்
ஒரு வழியாக 'நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள்?' என்று கேட்டுள்ளனர். அப்போதுதான் நீல் தனது விளக்கத்தை கொடுக்க வாய்ப்பை பெற்றுள்ளார்.
உடனே தன்னை நடிகர் என்றும், கூகுளில் தேடிப்பாருங்கள் என்றும் கூறிய அவர் தனது குடும்பத்தைப் பற்றிய விவரங்களையும் தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் நீல் நிதின் முகேஷ் விடுவிக்கப்பட்டுள்ளார். நீலின் தாத்தா மற்றும் தந்தை ஆகிய இருவரும் பின்னணி பாடகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments