ரிஷியுதனின் திறமையை கண்டு வியந்த பயிற்றுநர் சிசிர பிரபோத்

பாடசாலைகள் மட்ட 13 வயதிற்குட்பட்ட மூன்றாம் தர அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டியில் இன்னிங்ஸ் ஒன்றில் 9 விக்கெட்டுகளை வீழ்த்திய மருதானை சென்.ஜோசப் கல்லூரியின் செல்வசேகரன் ரிஷியுதன் அனைவரின் கவனைத்தையும் மீண்டும் ஈர்த்துள்ளார். 

ஒருநாளில் 4 இன்னிங்ஸ்களையும் கொண்டதாக நடத்தப்படும் கிரிக்கெட் போட்டியில் மாம்பே தர்மராஜ மகாவித்தியாலய அணிக்கு எதிராக அவர் இந்த ஆற்றலை வௌிப்படுத்தினார். 

போட்டியில் 11.1 ஓவர்களை வீசிய ரிஷியுதன் 4 ஓட்டமற்ற ஓவர்களுடன் 22 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

மாம்பே தர்மராஜ மகாவித்தியாலய அணி 31.1 ஓவர்களில் 73 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. 

இந்தப் போட்டியில் மருதானை சென்.ஜோசப் கல்லூரி அணி வெற்றிபெற்றதும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments