மேஷம் ராசி - MESHAM RASI
மேஷம் ராசி அன்பர்களே, குடும்பத்தில் பழைய அமைதி மீண்டும் திரும்பும். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இருக்கும். கடன் தொந்தரவு நீங்கும். தொழில், வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும்.
ரிஷபம் ராசி - RISHABAM RASI
ரிஷபம் ராசி அன்பர்களே, குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். பெரியோர்களின் ஆசி கிட்டும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.
மிதுனம் ராசி - MITHUNAM RASI
மிதுனம் ராசி அன்பர்களே, குடும்பத்தில் இருந்த சண்டை, சச்சரவு நீங்கும். திட்டமிட்ட வேலைகள் தாமதமின்றி முடியும். உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.
கடகம் ராசி - KADAGAM RASI
கடகம் ராசி அன்பர்களே, குடும்பத்தில் எதிர்பார்த்த மாற்றம் வரும். பிரியமானவர்களின் வருகை இருக்கும். உடல் நலத்தில் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
சிம்ம ராசி - SIMMAM RASI
சிம்மம் ராசி அன்பர்களே, நேற்றைய பிரச்சனைக்கு இன்று நல்ல முடிவு வரும். பிடிவாத போக்கை கொஞ்சம் தளர்த்திக்கொள்ளவும். புது நட்பால் நன்மை வந்து சேரும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.
கன்னி ராசி - KANNI RASI
கன்னி குடும்பத்தில் திடீர் செலவுகள் வரும். மன உளைச்சல் நீங்கி தெளிவு பிறக்கும். பாதியில் நின்ற வேலைகள் விரைவில் முடிவடையும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.
துலாம் ராசி - THULAM RASI
துலாம் ராசி நேயர்களே , வருங்காலம் பற்றிய சிந்தனை இருக்கும். வெளிவட்டாரத்தில் புது தொடர்புகள் கிடைக்கும். ஆன்மிக நாட்டம் ஏற்படும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.
விருச்சிகம் ராசி - VIRUCHIKAM RASI
விருச்சிகம் ராசி நேயர்களே, குடும்பத்தில் அனுசரித்து போகவும். சுற்றி இருப்பவர்கள் மத்தியில் மதிப்பு உயரும். திருமணம் காரியம் கைகூடி வரும். தொழில், வியாபாரம் சீரான பாதையில் செல்லும்.
தனுசு ராசி - DANUSU RASI
தனுசு ராசி நேயர்களே, பழமையான விஷயங்களில் ஆர்வம் கூடும். வாகன யோகம் உண்டு. சவாலான வேலைகளையும் சாதாரணமாக செய்ய முடியும். தொழில், வியாபாரத்தில் புது தொடர்புகள் கிடைக்கும்.
மகரம் ராசி - MAKARAM RASI
மகரம் ராசி நேயர்களே, சொந்த பந்தங்களுடன் இருந்த மனக்கசப்பு மாறும். பிரபலங்களின் தொடர்பு கிட்டும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும்.
கும்பம் ராசி - KUMBAM RASI
கும்பம் ராசி நேயர்களே, எதிர்பார்ப்புகள் நாளடைவில் பூர்த்தியாகும். நண்பர்களிடம் மனம் கோணாமல் நடந்துகொள்ளவும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.
மீனம் ராசி - MEENAM RASI
மீனம் ராசி நேயர்களே, அநாவசியச் செலவுகளை குறைத்துக்கொள்ளவும். திட்டமிட்டபடி பயணம் செய்ய முடியாது. காரிய தடை விலகும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
0 Comments