சென்னை சுப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் "தி ஹண்ட்ரட்" கிரிக்கெட் தொடரின் அணி ஏலத்திலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகிய!

இங்கிலாந்தில் இடம்பெறும் "தி ஹண்ட்ரட்" என்ற கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் அணியொன்றை வாங்குவதற்கான போட்டி ஏலத்திலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளதாகச் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த முடிவை, அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி காசி விஸ்வநாதன் ஊடகங்களுக்கு தங்களது முடிவை அறிவித்துள்ளார்.

இது குறித்து இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபை முறையாக அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ், லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கெபிடல்ஸ் ஆகிய நான்கு ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் குறித்த போட்டி ஏலத்தில் உள்ளனர்.

இந்த வார இறுதியில், 100 பந்துகள் கொண்ட தி ஹண்ட்ரட் தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கான ஏலத்தினை நடத்துவதற்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது

Post a Comment

0 Comments