நகைப்பிரியர்களே புதிய உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை

ஆபரணத்தங்கத்தின் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 120 ரூபாய் (இந்திய பெறுமதி) உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.7,730-க்கும் (இந்திய பெறுமதி) விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த வாரம் 22-ம் தேதி சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 60,200 ரூபாய்க்கு (இந்திய பெறுமதி) விற்பனையாது. அன்று முதல் தங்கம் விலை சவரன் ரூ.60ஆயிரத்துக்கு (இந்திய பெறுமதி) கீழ் இறங்கவில்லை. இந்த நிலையில், தங்கம் விலை நேற்று முன்தினம் புதிய உச்சமாக சவரனுக்கு 60,760 ரூபாய்க்கு (இந்திய பெறுமதி) விற்பனையானது. அதனைத் தொடர்ந்து நேற்றும் தங்கம் விலை அதிகரித்தது.

இந்த நிலையில் தங்கம் விலை இன்றும் அதிரடியாக உயர்ந்துள்ளது. இதனடிப்படையில் கிராமுக்கு 120 ரூபாய் (இந்திய பெறுமதி) உயர்ந்து ஒரு கிராம் தங்கம் 7,730 ரூபாய்க்கும் (இந்திய பெறுமதி) சவரனுக்கு 960 ரூபாய் (இந்திய பெறுமதி) உயர்ந்து ஒரு சவரன் 61,840 ரூபாய்க்கும்(இந்திய பெறுமதி) விற்பனையாகிறது. 

கடந்த 10 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,280 (இந்திய பெறுமதி) உயர்ந்துள்ளது நகைப்பிரியர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 107 ரூபாய்க்கும் (இந்திய பெறுமதி), கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து ஏழாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Post a Comment

0 Comments