இன்றைய காலகட்டத்தில் உடல் எடையை குறைப்பதற்கு பலரும் பல விதமான உடற்பயிற்சிகளையும், டயட்களையும் கையில் எடுக்கிறார்கள். ஆனால் அதை தொடர்ந்து செய்ய முடியாமல் பாதியில் கைவிட்டு புலம்பும் மனிதர்களையும் நான் பார்த்திருப்போம். அதனால் இந்த பதிவில் இஞ்சியை எப்படி உபயோகித்து சுலபமான முறையில் உடல் எடையை குறைக்கலாம் என்பதை கீழே விரிவாக காண்போம்.
ஒரு கிளாஸ் தண்ணீரில் இஞ்சியை சிறிது சிறிதாக வெட்டி அதனுள் போட்டு கொதிக்க வைத்து தினமும் காலை வெறும் வயிற்றில் குடிப்பதால் உடல் எடை தானாக குறைய உதவுகிறது. அதேபோல், உடல் எடையை குறைக்க ஆசைப்படுபவர்கள் இஞ்சி டீயை குடிப்பதை வழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள்.
மாறாக கிரீன் டீயிலும் இஞ்சி சேர்த்து குடிப்பது உடல் எடை குறைய உதவும். மேலும், இஞ்சி சாறில் தேன் மற்றும் தண்ணீர் கலந்து ஜூஸ் செய்து தினமும் குடித்தால் சுலபமாக உடல் எடையை குறைக்கலாம். அதேபோல் இஞ்சி சாறில் எலுமிச்சை சாறும் கலந்து குடிப்பதால் அதிகமாக சாப்பிடுவதை தவிர்ப்போம்.
இதன் மூலமும் உடல் எடையை குறைக்கலாம். மேலும், இதனுடன் தினமும் உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்றுவது உடலில் கொழுப்பு சேராமல் எடையை குறைக்க உதவும்.
0 Comments